ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக வருவாய் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (அக். 31) சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில், பாங்காக்கிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகள் இருவரின் உடமைகளில் பேக் செய்யப்பட்ட 13 காலி பெட்டிகள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அதனை, வெளியே எடுத்தபோது கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பெட்டிகளில் கஞ்சா மறைத்துவைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன், சந்தை மதிப்பு ரூ. 7 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா எனப்படும் இவ்வகை கஞ்சா நீர் சார்ந்த முறையில் பயிரிடப்படுவதகவும், கள்ளச் சந்தையில் இதற்கு அதிக மதிப்பு எனவும் கூறப்படுகிறது.
அந்தப் பெட்டிகளில் 7.096 கிலோ அளவிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்துள்ளது. கடத்திய இரு நபர்களை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றொரு வழக்கில், தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 155 கிராம் எம்டிஎம்ஏ எனப்படும் போதைப்பொருளை ராஜஸ்தானைச் சேர்ந்த நடைபாதை வியாபாரி கிருஷ்ணா ராம் (28) என்பவரிடம் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 18 லட்சம் எனக் கூறப்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.