ஜம்மு-காஷ்மீர் விபத்து 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கார் கவிழ்ந்து குழந்தை உள்பட மூவர் பலி!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்து..

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 மாதக் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

சசானாவிற்கு அருகில் உள்ள சமலுமோர் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது. பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனியார் கார் ரியாசியிலிருந்து சசானாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

காரிலிருந்து மூவர் உயிரிழந்த நிலையில், மூவர் பலத்த காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT