கோப்புப்படம். ENS
இந்தியா

3 வயது சிறுமி பாலியல் கொலை: உறவினர் கைது!

திருப்பதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

DIN

திருப்பதியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வடமலைபேட்டை பகுதி ஏ.எம். புரம் கிராமம் யனடி காலனியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 வயது பெண் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், குழந்தை ஒரு வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாக்லேட் கொடுத்து சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் குழந்தையைக் கொன்று வயலில் புதைத்துள்ளார். 22 வயதான அந்த இளைஞர் குழந்தையின் உறவினர் என தெரிய வந்ததுள்ளது.

விசாரணையில், ​​குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நகரி எம்எல்ஏ கலி பானு பிரகாஷ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Coolie | GVPrakash | CinemaUpdates

SCROLL FOR NEXT