முதலாளியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற பணிப்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் ஜூலியட் வீட்டில் சுனிதா என்பவர் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். சுனிதா வீட்டு வேலைபார்க்கும் பெண் என்றாலும், அவரிடம் தனது குடும்பப் பிரச்னைகள் குறித்தும் ஜூலியட் அவ்வப்போது விவாதித்து வந்துள்ளார். மேலும், கணவரைப் பிரிந்து ஜூலியட் தனியாக வசித்து வந்த நிலையில், கணவருக்கு தெரியாமல் அவருடைய பணத்தையும் நகைகளையும் தன்னிடமே வைத்திருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையில் ஓர் ஸ்டானி என்ற ஆணுடன் வந்த சுனிதா, ஸ்டானியை வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி நம்ப வைத்துள்ளார். வீட்டைச் சோதனை செய்ய அவர் வந்திருப்பதாகக் கூறி, ஜூலியட் வைத்திருந்த நகைகள், பணத்தினைச் சோதனை செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் அதிகாரி சென்றவுடன் திருப்பி தருவதாகக் கூறி, ஜூலியட்டின் ரூ. 7.5 லட்சம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, போலி அதிகாரியான ஸ்டானியுடன் சேர்ந்து, சுனிதாவும் வீட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலியட், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.