போக்குவரத்து காவலர்கள் (கோப்புப்படம்) DIN
இந்தியா

கன்னடம் கற்றுக்கொடுக்க கர்நாடக போக்குவரத்துக் காவலர்கள் எடுக்கும் முயற்சி!

கர்நாடகத்தில் உள்ள இதர மாநில மக்களுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்க போக்குவரத்துக் காவலர்கள் முயற்சி!

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரு: கர்நாடகத்தில் வாழும் கன்னடம் தெரியாத மக்களும் கன்னடம் கற்றுக்கொள்ள வசதியாக, போக்குவரத்துக் காவலர்கள், அடிப்படையான கன்னட வார்த்தைகளைக் கொண்ட போஸ்டர்களை ஆட்டோக்களில் ஒட்டி வருகிறார்கள்.

தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையன்று கர்நாடகம் முழுவதும் இருக்கும் போக்குவரத்துக் காவலர்கள், சுமார் 5 ஆயிரம் ஆட்டோக்களில் இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் ஆட்டோக்களில் ஒட்ட இலக்கி நிர்ணயித்திருக்கிறார்களாம்.

இந்த போஸ்டரில், கன்னடத்தில் அடிப்படையான சில வாக்கியங்கள் அப்படியே ஆங்கிலத்திலும், அதற்கு என்ன அர்த்தம் என்பது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.

மொழி தெரியாதவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மோசமாக நடந்துகொள்வதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது உள்ளிட்ட அடிப்படையான வாக்கியங்கள் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருப்பதாகவும், கன்னடம் தெரியாமல் இருப்பவர்களுக்கு இது உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT