காகங்கள் Center-Center-Chennai
இந்தியா

'நான் ஈ' படம் போல காகங்களும் பழிவாங்குமா? மனிதர்களை அடையாளம் காணுமா?

'நான் ஈ' படம் போல காகங்களும் பழிவாங்கும், மனிதர்களை அடையாளம் காணும் என ஆய்வில் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பொதுவாக மனிதர்கள் தங்களுக்குத் தொல்லைக் கொடுத்தவர்களை பழிவாங்குவது என்பது வழக்கமானதுதான், ஆனால் பறவைகளும் விலங்குகளும் ஒருவரை நினைவில் வைத்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு வாங்கும் என்றே பதில் கிடைத்திருக்கிறது.

பறவைகள் நிபுணர் ஒருவர் இதற்கான காரணத்தையும் ஆய்வின்போது கிடைத்த அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கிறார்.

அதாவது, நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஒருதனிப்பட்ட நபர் மீது காகம் கோபம் கொண்டால், அது நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் என்றும், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வின் முடிவுகளை தற்போது உறுதிசெய்துகொண்டு வெளியிட்டிருக்கிறார்.

வாஷிங்டன் பல்கலையின் சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர் ஜான், தான் செய்த ஆய்வின் முடிவு குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டு, காகங்கள் பழிவாங்குமா என்பதை அறிய விரும்பி ஆய்வில் இறங்கினார். இந்த ஆய்வின்போது, அவர் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு ஏழு காகங்களைப் பிடித்து கூண்டில் அடைத்தார். பிறகு, அந்த காகங்களின் இறகுகளில் ஒரு சிறு அடையாளத்தை மட்டும் வரைந்தார். பிறகு அவற்றை எதுவுமே செய்யாமல் வெளியே விட்டுவிட்டார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் கல்லூரிக்கு வரும்போதும் அந்த காகங்கள் அவரை பின்தொடருவதும், அந்த முகமூடியை அணிந்தால், அவரைத் தாக்குவதுமாக இருந்துள்ளன.

இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அடையாளமிடப்பட்ட காகங்கள் இவரைத் தாக்கும்போது மற்ற காகங்களும் சேர்ந்துகொள்ளுமாம். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு காகங்களின் தாக்குதல் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. ஆனால், முடிந்துவிடவில்லை இந்த பழிவாங்கும் நடவடிக்கை.

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அதாவது 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் , அதே முகமூடியை அணிந்துகொண்டு ஜான் வெளியே நடக்கும்போது காகங்கள் அவரைப் பின்தொடரவோ அல்லது தாக்கவோ இல்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர் ஜான் தனது ஆய்வு முடிவை இதழில் வெளியிட முடிவு செய்துள்ளார். தான் பிடித்து வைத்த காகங்கள், தன்னை அடையாளம் கண்டுதான் தாக்கியிருக்கின்றன என்பது 17 ஆண்டுகளுக்குப்பிறகு அதே முகமூடியை அணிந்துகொண்டு வெளியே வந்ததன் மூலம் உறுதியாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால், மனிதர்களைப் போலவே, காகத்தின் மூளையும், கோபம் போன்ற உணர்வுகளுக்கு செயல்படுகிறது. மனிதர்களை மட்டும் அது கவனிக்கவில்லை, மனித முகங்களையும் கூட அது நினைவில் கொள்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவர், காகங்களுக்குத் தொல்லைகொடுத்தால், அதனை அவை நினைவில் கொள்வதுடன் மற்ற காகங்களுக்கும் அந்த தகவலை கடத்துகிறது என்றும் ஆய்வாளர் கண்டறிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! | செய்திகள்: சில வரிகளில்| 1.9.25

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

SCROLL FOR NEXT