எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் கோப்புப் படம்
இந்தியா

பிகார் எம்.பி.க்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்?

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளனர்.

DIN

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளனர்.

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவின் உதவியாளரின் போனுக்கு வியாழக்கிழமை (நவ. 7) அதிகாலை 2.25 மணிக்கு கொலை மிரட்டலுடன் கூடிய குறுஞ்செய்தி பெறப்பட்டுள்ளது; தொடர்ந்து, காலை 9.49 மணிக்கும் மற்றொரு மிரட்டலுடன் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளனர்.

குறுஞ்செய்தியில், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷின் உதவியாளர் தெரிவித்தார்.

சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறித்து ராஜேஷ் ரஞ்சன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் என்று பொய்கூறிய ஒருவரும் கடந்த மாதத்தில் கொலை மிரட்டல் விடுத்தார். இருப்பினும், விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளூா் மொழி தெரிந்த வங்கி ஊழியா்களை நியமிப்பது அவசியம்: நிா்மலா சீதாராமன்

திறன் மேம்பாடு பயிற்சி

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நிலம் கற்று நேரம் காப்போம்...

SCROLL FOR NEXT