பாபா சித்திக் 
இந்தியா

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

மகராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை தொடர்பான வழக்கில் மேலும் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணேவின் கர்வேநகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா குலாங்கர், ரபீக் நியாஸ் ஷேக் ஆகிய இருவரும் பாபா சித்திக்கின் கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரவின் லோங்கர் மற்றும் மற்றொரு குற்றவாளியான ரூபேஷ் மொஹோல் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு பலமடங்கு உயர்வு!

ஏற்கனவே கைது செய்யப்பட்ட லோங்கர் மற்றும் மொஹோல் ஆகிய இருவரும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள குலாங்கர் மற்றும் ஷேக் ஆகியோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சித்திக் (66) கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது மகன் கட்சி அலுவலகத்தின் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT