PTI
இந்தியா

மாணவர்களுக்கு ரூ.10,000 மாதாந்திர உதவித் தொகை! -பாஜக தேர்தல் அறிக்கை

மகாராஷ்டிரா: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

DIN

மகாராஷ்டிரத்தில் நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(நவ. 10) மும்பையில் வெளியிட்டார். அதில் முக்கிய வாக்குறுதியாக, 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.10,000 மாதாந்திர உதவித் தொகை அளிக்கப்படும், அடுத்த ஐந்தாண்டுகளில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான ஊக்கத் தொகை ரூ. 1,500-லிருந்து ரூ. 2,100-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT