PTI
இந்தியா

பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை! -காங். கூட்டணி தேர்தல் அறிக்கை

மகாராஷ்டிரா: காங். கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

DIN

மகாராஷ்டிரத்தில் நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும், பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ‘மகாராஷ்டிராநாமா’ என்ற பெயரிலான காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று(நவ. 10) மும்பையில் வெளியிட்டார். அதில் முக்கிய வாக்குறுதியாக, பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

  • மஹாலக்ஷ்மி திடத்தின்கீழ், மகளிருக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை, அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்

  • விவசாயிகளுக்கு தலா ரூ. 50,000 (உரிய தவணையில் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துவோருக்கு)

  • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 50 சதவிகித இடஒதுக்கீட்டு முறை நீக்கப்படும். இதன்மூலம், நலிவுற்ற சமூகப் பிரிவினருக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்

  • வேலை தேடும் இளைஞர்களுக்கு ரூ. 4,000 மாதாந்திர உதவித் தொகை

  • ரூ. 25 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT