ராகுல் காந்தி - பிரதமர் மோடி கோப்புப் படம்
இந்தியா

அதானியைக் காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!

உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலியான சம்பவத்தையடுத்து ராகுல் கண்டனம்

DIN

பிகாரில் உடல் நசுங்கி பலியான ரயில்வே ஊழியரின் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகாரில் லக்னௌ - பரவுனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (நவ. 9) பரவுனி ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. இந்த நிலையில், ரயில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைக்கும் பணியில், அருண் குமார் ராவத் என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் ரயில் பெட்டிகளுக்கு இடையில் ஊழியர் இருப்பதைக் கவனிக்காத லோகோ பைலட், ரயிலை இயக்கியுள்ளார். ரயிலை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், பெட்டிகளுக்கு இடையில் இருந்த அருண் குமார் உடல் நசுங்கி பலியானார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, லோகோ பைலட் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த நிலையில், ரயில்வே துறையின் அலட்சியத்தால்தான் ஊழியர் பலியானதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? அதானியை பாதுகாப்பதில் மட்டுமே நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள்.

ரயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு முதலானவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த தினம்: மாவட்ட அளவில் பாத யாத்திரை நடத்த முடிவு

வடகாசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

ஐந்து மாவட்டங்களில் 150 பள்ளிகளில் அறிவியல், கணிதம் செய்முறை பயிற்சி

உத்தமபாளையத்தில் நெல்பயிா் அறுவடைப் பணிகள் தீவிரம்

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT