முகப்பு
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: பிரசாரம் நிறைவு!

‘ஐ லவ் வயநாடு..’ ராகுல், பிரியங்கா காந்தி இறுதிக்கட்ட பிரசாரம்...

Updated On : 11 நவம்பர், 2024 at 7:51 PM
சுல்தான் பத்தேரியில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா - PTI
பகிர்:

கேரளத்தின் வயநாடு தொகுதிக்கு நாளை மறுநாள்(நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

தோ்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் பிரியங்கா காந்தியை எதிா்த்து பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறாா்.

Advertisement

இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வயநாட்டில் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை நிறைவடைந்தது. இறுதிநாளான இன்று, பிரியங்கா காரின் படிக்கட்டில் நின்றபடி சென்றுகொண்டே, சுல்தான் பத்தேரியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதேபோல ‘ஐ லவ் வயநாடு’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த டி-ஷர்ட் அணிந்துகொண்டு ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.