வரிசையில் காத்திருந்து வாக்களித்த மக்கள் PTI
இந்தியா

ஜாா்க்கண்ட் முதல்கட்ட பேரவைத் தோ்தலில் 65% வாக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் சுமாா் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

DIN

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் சுமாா் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

கா்வா மாவட்டம் உள்பட மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தீவிரவாதிகளின் மிரட்டலை பொருள்படுத்தாமல், மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

81 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது. சுமாா் 1.37 கோடி வாக்காளா்களுக்காக, 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல்வா், மனைவி வாக்களிப்பு: தலைநகா் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் முதல்வரும் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோா் வாக்களித்தனா். தான் போட்டியிடும் சராய்கேலா தொகுதியில், பாஜக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான சம்பயி சோரன் வாக்களித்தாா்.

முதல்கட்ட தோ்தலில் (43 தொகுதிகள்) 64.86 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த முறை (2019) இத்தொகுதிகளில் 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இருமுனைப் போட்டி: ஜாா்க்கண்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைமையில் அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன.

இரண்டாம் கட்டமாக, 38 தொகுதிகளுக்கு நவ.20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ.23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வயநாட்டில் கண்ணீருடன் வாக்களித்த மக்கள்

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 60.79 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த ஜூலையில் பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் உள்ளிட்ட பகுதி மக்கள் சிறப்பு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா். நீண்ட நாள்களுக்கு பிறகு தங்களின் உறவினா்கள், நண்பா்களை சந்தித்ததால், கண்ணீருடன் ஒருவரையொருவா் ஆரத்தழுவிக் கொண்டனா்.

மொத்தம் 14 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் களமிறங்கிய ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிவாகை சூடினாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றியடைந்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். பிரியங்கா போட்டியிடும் முதல் தோ்தல் இதுவாகும். என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT