ஒடிஸாவில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்து சென்ற விபத்தில் பெண் பலியானார்.
ஒடிஸாவில் புவனேஸ்வரில், பிஷ்ணு பத்ரா (45) என்பவர் கணவருடன் திங்கள்கிழமை (நவ. 12) பைக்கில் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இருவர், பிஷ்ணுவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து பிஷ்ணுவும் அவரது கணவரும் தப்பித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களைத் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், பிஷ்ணுவின் கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துச் சென்று தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவத்தின்போது, பைக்கில் இருந்து கீழே விழுந்த பிஷ்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் பிஷ்ணு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பிஷ்ணு புதன்கிழமையில் (நவ. 14) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: நெருப்பாக இருக்கிறதா சூர்யாவின் கங்குவா? திரை விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.