பிர்சா முண்டாவின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.  
இந்தியா

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

பிர்சா முண்டா பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

DIN

பழங்குடியினர் விடுதலைப் போராட்டவீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், பிர்சா முண்டா நாட்டின் பெருமைக்காகவும், பெருமையைக் காக்கவும் எல்லாத்தையும் தியாகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார்.

25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், 'நிலத்தின் தந்தை' எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். தற்போது இவரின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் விடியோ ஒன்றையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் உள்ள நிகழ்ச்சியில் இன்று கலந்துகொள்ளும் பிரதமர் மோடி ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைக்கிறார்.

2000 ஆம் ஆண்டு பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT