செபி தலைவர் மாதவி புச் PTI
இந்தியா

நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராக செபி தலைவருக்கு சம்மன் அனுப்பாதது பற்றி..

DIN

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆஜராக செபி தலைவர் மாதவி புச்சுக்கு இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை.

செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், அக். 24 நடைபெற்ற பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி அந்த குழுவின் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான கே.சி.வேணுகோபால் சம்மன் அனுப்பியிருந்தார்.

இந்த கூட்டத்தில் ஆஜராவதில் இருந்து மாதவி புச் விலக்கு கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க கே.சி.வேணுகோபால் மறுத்துவிட்டார்.

கூட்டம் நடைபெறும் கடைசி நேரத்தில் சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக மாதவி புச் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மற்றொரு நாளில் ஆஜராக கே.சி.வேணுகோபால் அனுமதி அளித்தார்.

இந்த நிலையில், அடுத்த பொதுக் கணக்கு குழு கூட்டத்தில் ஆஜராக செபி தலைவருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வருகின்ற நவ. 19-ஆம் தேதி பொதுக் கணக்கு குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக மக்களவை வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த கூட்டத்தில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபி தலைவர் மாதவி புச் அல்லது செபி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT