கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்த பேருந்து சாலக்காயத்துக்கும் நிலக்கல்லுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் 30வது ஹேர்பின் வளைவில் அதிகாலை 5.30 மணியளவில் வந்துகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. \
பேருந்தில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து பகுதியளவில் சேதமடைந்த போதிலும், காலியாக சென்ற பேருந்து என்பதால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
தீவிபத்தைத் தொடர்ந்து தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவரவில்லை. மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.