கோப்புப்படம். 
இந்தியா

மங்களூரு: சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம் பெண்கள் பலி

மங்களூருவில் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம் பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மங்களூருவில் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம் பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், உல்லல் கடற்கரைக்கு அருகில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் சனிக்கிழமை 3 இளம் பெண்கள் தங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இறங்கி குளித்துள்ளனர்.

நீச்சல் தெரியாத நிலையிலும் நிஷிதா(21) குளத்தில் முதலில் இறங்கியதாக கூறப்படுகிறது.

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டுவர உழைக்கிறது பாஜக!

அவரைத் தொடர்ந்து, பார்வதி(20), கீர்த்தனா (21) என அடுத்தடுத்து நீரில் இறங்கி தத்தளித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

பலியான 3 இளம் பெண்களுக்கும் நீச்சல் தெரியாது என்றும், அந்த நேரத்தில் உயிர்காக்கும் காவலர் யாரும் பணியில் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உல்லல் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT