எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படம்: X/RahulGandhi
இந்தியா

வேலையில்லா திண்டாட்டத்தில் மக்கள்... அதானிக்கு வேலை செய்யும் அரசு! ராகுல்

மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசின் மீது ராகுல் காந்தியின் விமர்சனம் பற்றி...

DIN

மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் உள்ள நிலையில், மோடி அரசும், மகாராஷ்டிர அரசும் அதானிக்காக வேலை செய்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசையும், மகாராஷ்டிரத்தை ஆளும் மகாயுதி அரசையும் விமர்சித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“யார் பாதுகாப்பாக உள்ளனர்? அதானி. யாருக்கு தாராவியின் ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நிலம் வழங்கப்பட்டது? அதானி. யார் பாதுகாப்பில்லாமல் உள்ளனர்? மகாராஷ்டிரத்தின் சாதாரண மக்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்.

சாதாரண மக்களும் விவசாயிகள் பணமதிப்பிழப்பு, வேலையில்லா திண்டாட்டம், கடன் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், மோடி அரசும், மகாராஷ்டிரத்தின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுநாள் (நவ. 20) மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலும், ஜார்கண்ட் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. நவ. 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT