தனது வாக்கை பதிவு செய்த நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக் 
இந்தியா

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்..

DIN

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 9 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

அதேபோல, ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, ஜார்க்கண்ட் 2-ஆம் கட்டத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி, 12.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT