இந்தியா

மகாராஷ்டிரத்தில் 58% வாக்குப்பதிவு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. (மாலை 5 மணி நிலவரம்)

அதிகபட்சமாக நக்சல் அமைப்புகளின் நடமாட்டம் மிகுந்த கட்சிரோலி பகுதியில் 69.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக மும்பையில் 49.07% வாக்குகளும் பதிவானது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9.7 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சுமாா் 6 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலையில் வாக்குப்பதிவு வேகம் அதிகரித்தது. இதனால் மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 58.22% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக நக்சல் அமைப்புகளின் நடமாட்டம் மிகுந்த கட்சிரோலி பகுதியில் 69.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக மும்பையில் 49.07% வாக்குகளும் பதிவானது.

சந்திரபூர் தொகுதியில் 49.87%, ரத்னகிரி தொகுதியில் 50.04%, ஜல்னா தொகுதியில் 50.14%, கோஹல்பூர் தொகுதியில் 54.06%, நந்துர்பார் தொகுதியில் 51.16%, வர்தா தொகுதியில் 49.68%, ஹிங்கோலி 49.64% வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT