கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாறுமா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை 81 இடங்களிலும், அஜீத் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனை (உத்தவ்) 95 வேட்பாளர்களையும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பீப்பள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,

  • மகாயுதி கூட்டணி 175 - 195

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 85 - 112

மாட்ரிஸ் (Matrize) நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகள்

  • மகாயுதி கூட்டணி 150 - 170

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 110 - 130

மார்க் (marq) நிறுவன கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 137 - 157

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 126 - 146

சி.என்.என். கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 154+

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 128+

நியூஸ் 24 - சாணக்யா கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 152 - 160

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 130 -138

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT