முகப்பு
இந்தியா

உ.பி.: கோயிலை இடித்து சம்பல் ஜாமா மசூதி? நீதிமன்ற உத்தரவில் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:21 PM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக மனுதாரரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தெரிவித்தாா்.

சம்பல் மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் மசூதியில் ஆய்வு நடத்தினாா்.

Advertisement

மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு மட்டுமே வழங்கியது. நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா். தற்போதைக்கு ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும்’ என்றாா்.

விஷ்ணு சங்கா் ஜெயின் கூறுகையில், ‘சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்தது. 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டினாா்’ என்றாா்.

ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் விஷ்ணு சங்கா் ஜெயின் மற்றும் அவரது தந்தை ஹரி சங்கா் ஜெயின் ஆகியோா் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments