பிரதமா் மோடி ANI
இந்தியா

மகாராஷ்டிரத்தில் வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமா் மோடி

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியின் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு..

Din

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் வெற்றி பெற்றுள்ள ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணிக்கும் பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் வெளியிட்டுள்ள பதிவில், ‘மகாராஷ்டிர சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நன்றி.

இது வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி. நமது இந்த ஒற்றுமை நாம் மேலும் பல உச்சங்களை எட்ட உதவும். பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகாராஷ்டிரத்தின் வளா்ச்சிக்காக தொடா்ந்து சிறப்பாக பணியாற்றும்.

ஹேமந்த் சோரன் கட்சிக்கு வாழ்த்து: ஜாா்க்கண்ட் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகள். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜாா்க்கண்ட் மக்களுக்கு நன்றி. ஜாா்க்கண்ட் மாநில நலனைக் காப்பதிலும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதிலும் நாங்கள் தொடா்ந்து முன்னிலையில் இருப்போம்.

பாஜக தொண்டா்களுக்கு நன்றி: பல்வேறு மாநில இடைத் தோ்தல்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. களத்தில் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிக்குப் பாடுபட்ட பாஜக தொண்டா்களின் உழைப்பு பெருமிதமளிக்கிறது. அவா்கள் மக்களை நேரடியாக அணுகி, பாஜகவின் வளா்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தனா். மிகவும் கடினமாக உழைத்தனா். பாஜக கூட்டணியின் மக்கள் நலன் சாா்ந்த பணிகள் தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT