கோப்புப் படம் 
இந்தியா

ஜார்க்கண்ட்: தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

காலை 9.30 மணி நிலவரப்படி...

DIN

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், காலை 9.30 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இண்டி’ கூட்டணி 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜார்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரத்திலும் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கும் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT