பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை  
இந்தியா

வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் 200 இடங்களில் பாஜக+ முன்னிலை

மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

DIN

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெறத் தேவையான தொகுதிகளை விடவும் அதிகமான தொகுதிகளில் அதாவது 200 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம், வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகா யுதி கூட்டணில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிட்ட 149 இடங்களில் 127 தொகுதிகளிலும், சிவ சேனை போட்டியிட்ட 81 தொகுதிகளில் 53 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்ட 59 இடங்களில் 34 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி 55 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிவசேனை (உத்தவ்) கட்சி 21 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 20 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ்) 95, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 தொகுதிகளில் களம் கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 4,135 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT