அரசு முறைப் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று(நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தில்லியில் இன்று காலை இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீலகிரி மலையில் நிலவும் கடும் மேகமூட்டத்தின் காரணமாக கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக உதகை புறப்பட்டுச் சென்றார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் நடத்துகிறார். மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.