dot com
இந்தியா

செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ. 1.62 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு 6.5% அதிகரித்துள்ளது.

DIN

செப்டம்பர் மாதம் ரூ.1.73 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதித் துறை அமைச்சகம் இன்று (அக். 1) அறிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6.5% அதிகரித்துள்ளது.

இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.

செப்டம்பர் மாதத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் அதிகரித்துள்ளது.

2024-ல் இதுவரை வசூலான மொத்த ஜிஎஸ்டி 10.9 லட்சம் கோடி. இதுகடந்த ஆண்டை விட 9.5% அதிகமாகும். கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9.9 லட்சம் கோடி வசூலானது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

2023 - 2024 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ. 20.18 லட்சம் கோடி. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

SCROLL FOR NEXT