பிரதமர் மோடி, வினேஷ் போகத். 
இந்தியா

பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்த வினேஷ் போகத்! காரணம் என்ன?

பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை வினேஷ் போகத் ஏற்க மறுத்ததாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஏற்க மறுத்ததாகக் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிநாமா செய்தார். பின்னர், செப்.6இல் காங்கிரஸில் இணைந்தார்.

ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேர்காணலில் வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமரிடம் வந்த அழைப்பு குறித்து பேசியதாவது:

பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது நேரடியாக அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இந்திய அதிகாரிகள் பிரதமர் மோடி என்னிடம் பேச விரும்புவதாகக் கூறினார்கள். நானும் தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் சில நிபந்தனைகளை வித்தித்தார்கள். அதில் - என்னுடைய அணியினர் யாரும் அருகில் இருக்கக் கூடாது. பிரதமரின் சார்பில் இரண்டு நபர்கள் நாங்கள் பேசுவதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட இருப்பதாகக் கூறினார்கள்.

நான் எனது கடின உழைப்பையும் உணர்ச்சிகளையும் சமூக வலைதளங்களில் கிண்டல்களுக்கு உள்ளாக விரும்பவில்லை.

பிரதமர் மோடி நிஜமான அக்கறையுடன் அழைத்திருந்தால் நான் நிச்சயமாகப் பேசியிருப்பேன். அவருக்கு விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் விடியோ பதிவு செய்யாமலேயே அழைத்திருப்பார்.

ஒருவேளை அவர் பேசுவதாக இருந்தால் நான் கடந்த 2 வருட விஷயங்கள் குறித்து கேட்பேன் என அவருக்குத் தெரிந்திருக்கும். அதனால்தான் நான் செல்ஃபோன் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கவில்லை. அவர்கள் என்னுடைய விடியோவை எடிட் செய்யலாம். ஆனால், நான் நிஜமான விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்பதால் அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை

பராசக்தி 3 ஆவது பாடல் புரோமோ!

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

இரண்டு போட்டிகளில் ஷுப்மன் கில்லை மதிப்பிட்டால்... ஆஷிஷ் நெஹ்ரா கூறுவதென்ன?

திாிபுராந்தீஸ்வரா் கோயிலில் மஹாதேவ அஷ்டமி!

SCROLL FOR NEXT