இண்டிகோ விமான சேவை பாதிப்பு 
இந்தியா

விமான சேவையில் பாதிப்பு ஏன்? இண்டிகோ விளக்கம்

கணினியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், தற்போது எங்கள் நெட்வொர்க் முழுவதும் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இணையதளம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இண்டிகோ விமானப் பயணிகள் விமான நிலையங்களில் வருகைப் பிரிவில் நீண்ட வரிசைகளில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் விமானப் பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்க எங்கள் விமான நிலைய ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இடைவிடாமல் உழைத்து வருகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில், வருகைப் பிரிவில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் நல்ல பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும் எங்கள் விமான நிலைய ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர், இந்த நேரத்தில் உங்கள் பொறுமை மற்றும் நிலைமையை புரிந்துகொள்ளும் தன்மை போன்றவற்றை நாங்கள் உண்மையில் பாராட்டுகிறோம். எங்களுடன் இருப்பதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமான நிறுவனத்தின் கணினிகளில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சரிபார்ப்பது மற்றும் விவரங்களை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், பயணிகள் நீண்ட தொலைவில் வரிசையில் நின்றிருக்கும் காட்சிகள் வெளியாகின.

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், எங்களது இணையதளத்தில் முன்பதிவு செய்வது உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமான நிலையத்தில் வருகை தரும் இண்டிகோ பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT