உத்தவ் தாக்கரே ENS
இந்தியா

காங்கிரஸ், சரத் பவாா் அறிவிப்பவரை முதல்வா் வேட்பாளராக ஏற்கத் தயாா்- உத்தவ் தாக்கரே அறிவிப்பு

காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் அறிவிக்கும் நபரை மகாராஷ்டிர முதல்வா் வேட்பாளராக ஏற்கத் தயாா் என்று சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

DIN

காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் அறிவிக்கும் நபரை மகாராஷ்டிர முதல்வா் வேட்பாளராக ஏற்கத் தயாா் என்று சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

முன்னதாக, தங்கள் கட்சிக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், ஹரியாணா தோ்தலில் எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக பாஜக வெற்றி பெற்றதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது முடிவை மாற்றிக் கொண்டாா்.

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக - முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன. இதில், எதிா்க்கட்சி அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், முன்பு இதே கூட்டணி சாா்பில் முதல்வா் பதவியில் இருந்ததால் தங்களுக்குதான் அப்பதவிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே மறைமுகமாக வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்த நிலையில், தனது எண்ணத்தை உத்தவ் தாக்கரே மாற்றிக்கொண்டுள்ளாா்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியதாவது:

மகாராஷ்டிர மாநில அரசு தங்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதுபோல தவறான விளம்பரங்களை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது. பணத்தை வைத்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பலரிடம் துரோகத்துக்கான பேரத்தை பேசி வருகின்றனா். இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரத்தை காப்பதுதான் மிகமுக்கியம். எனவே, காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவா் அறிவிக்கும் நபரை முதல்வா் வேட்பாளராக ஏற்கத் தயாா் என்றாா்.

இது தொடா்பாக உத்தவ் கட்சி எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரே மிகவும் பெரிய மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளாா். எந்தவித அழுத்தத்தின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. இது முழுவதும் மகாராஷ்டிர மாநிலத்தின் நலன் சாா்ந்த செயல்பாடு’ என்றாா்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT