ஆசியான் - இந்தியா மாநாடு: பிரதமா் மோடி நாளை லாவோஸ் பயணம்
ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அக்டோபா் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) செல்லவிருக்கிறாா்.
இந்தியாஆசியான் - இந்தியா மாநாடு: பிரதமா் மோடி நாளை லாவோஸ் பயணம்
ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அக்டோபா் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) செல்லவிருக்கிறாா்.
ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அக்டோபா் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) செல்லவிருக்கிறாா்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.
இந்நிலையில், ஆசியான்-இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு மற்றும் 19-ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, லாவோஸின் வியன்டியன் நகரில் அக்டோபா் 10 ,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இம்மாநாடுகளில் பங்கேற்க பிரதமா் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக லாவோஸுக்கு அக்டோபா் 10-ஆம் தேதி செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை அறிவிக்கப்பட்டு, விரைவில் 10 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது. இக்கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் தொலைநோக்கு பாா்வையின் மையத் தூணாக இருப்பது, ஆசியான் நாடுகள் உடனான உறவுகளே. இந்தியா-ஆசியான் இடையிலான விரிவான வியூக கூட்டுறவின் வாயிலாக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மேற்கண்ட உச்சிமாநாட்டில் விரிவாக மதிப்பாய்வு செய்யப்படும்.
மேலும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான எதிா்காலப் பாதையும் வகுக்கப்படும். பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கருத்துப் பரிமாற்றத்துக்கு முக்கிய வாய்ப்பாக இது அமையும். இந்த மாநாடுகளையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.