கோப்புப்படம் ANI
இந்தியா

ஜம்மு - காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டது பற்றி...

DIN

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்களை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2 ராணுவ வீரர்கள் கடத்தல்

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிக்குள் இரண்டு ராணுவ வீரர்களை பயங்கரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அதில், ஒருவர் மட்டும் தப்பி வந்துவிட்டார்.

மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் மற்றொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

3 பயங்கராதிகள் கைது எதிரொலி?

அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கி, கையெறி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதே மாவட்டத்தில் தற்போது ராணுவ வீரர் கடத்தப்பட்டிருப்பது, அவர்கள் மூவரையும் விடுவிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை ஒன்றே போதும்... அஞ்சு குரியன்!

மயிலாடுதுறை: குறைதீா் கூட்டத்தில் 287 மனுக்கள்

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி பங்குகளை ரூ.676 கோடிக்கு விற்பனை செய்த ஜிக்யூஜி பார்ட்னர்ஸ்!

முதல் டி20: தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா - 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இளமை வாசம்... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT