மிக்சர் பாக்கெட்டில் கொகைகன் 
இந்தியா

மிக்சர் பாக்கெட்டில் ரூ.2,400 கோடி மதிப்புள்ள கொகைன்..

மிக்சர் பாக்கெட்டில் ரூ.2,400 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

புது தில்லி: புது தில்லியில், சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சோதனையில், ரூ.2,400 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, ரமேஷ் நகர் பகுதியில் இருந்த கிடங்கு ஒன்றில் 200 கிலோ எடையுள்ள கொகைகன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொகைகன் கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணை தொடங்கியிருக்கிறது. இதில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும், அவர் லண்டனுக்குத்தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேற்கு தில்லியில், அண்மைக் காலங்களில் நடத்தப்பட்ட கொகைன் பறிமுதல் நடவடிக்கையில் இதுவரை 9000 ரூபாய் மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே இந்த அளவுக்கு கொகைன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதுவரை அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 562 கிலோ எடையுள்ள ரூ.6500 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்துள்ளது.

சர்வதேச சந்தையில், தங்கம் விலை போல ஏறி தற்போது ஒரு கிலோ கொகைன் மதிப்பு ரூ.12 கோடியாக உள்ளது.

அண்மையில் இசைக் குழு பற்றி பேசுவது போல சந்கேத மொழியில் பேசி, த்ரீமா செயலி மூலம் இயங்கி வரும் கொகைன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்த காவல்துறையினர், மிக்சர் என்று லேபிள் செய்யப்பட்ட மிக அழகிய வண்ணப் பாக்கெட்டுகளில் ஒளிந்திருந்தது கொகைன் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT