தில்லியில் 23 வயது இளைஞரின் குடலில் இருந்து 3 செமீ உயிருள்ள கரப்பான் பூச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
தலைநகர் தில்லியில் பாதிப்புக்குள்ளான அந்த இளைஞர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது.
அதில் இளைஞரின் சிறுகுடலில் உயிருள்ள கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. உடனே எண்டோஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுகுடலில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சி 10 நிமிடங்களில் அகற்றப்பட்டது.
அந்த கரப்பான் பூச்சி 3 செமீ அளவில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதுபோன்ற வழக்குகள் உயிருக்கு ஆபத்தானவை என்று அவர்கள் எச்சரித்தனர். எண்டோஸ்கோபி மூலம் விரைவாக அகற்றப்பட்டது எனவும் அவர்கள் மேலும் கூறினர்.
நோயாளி சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது அது அவரது வாயில் நுழைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.