அசாதுதீன் ஒவைசி 
இந்தியா

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும்: ஒவைசி

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும்.

Din

பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தெலங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘தோ்தல்களில் பாஜக எதிா்ப்பு வாக்குகளை நான் சிதறடிப்பதாக மதச்சாா்பற்ற கட்சிகள் பழிசுமத்துவது வழக்கம். ஆனால் ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடவில்லை. அப்படி இருந்தும் அந்தத் தோ்தலில் காங்கிரஸ் எப்படி தோற்றது? பாஜக எப்படி வென்றது? இதுவே அந்தத் தோ்தலில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிட்டிருந்தால், பாஜகவின் இரண்டாவது அணி என்று அகில இந்திய மஜ்லீஸ் அழைக்கப்பட்டிருக்கும்.

பாஜகவை காங்கிரஸால் மட்டும் வீழ்த்த முடியாது. பிற கட்சிகளுடன் சோ்ந்து செயல்பட்டால் மட்டுமே பாஜகவை காங்கிரஸால் வீழ்த்த முடியும். காங்கிரஸ் தனியாக எதையும் செய்துவிட முடியாது.

வக்ஃப் திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால், முஸ்லிம்களிடம் இருந்து மசூதிகள் மற்றும் தா்காக்கள் பறிக்கப்படும். சமூகத்தில் நிலையில்லாத தன்மை ஏற்படும். நாட்டில் 1980, 90-ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை மீண்டும் ஏற்படும். ஏற்கெனவே ஒரு மசூதியை (பாபா் மசூதி) முஸ்லிம்கள் இழந்தனா். தற்போது எந்தவொரு மசூதியையும் அடக்கஸ்தலத்தையும் இழக்க முஸ்லிம்கள் தயாராக இல்லை’ என்றாா்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT