கடல்சார் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் ராஜ்நாத் சிங்
கடல்சார் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாகடல்சார் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் ராஜ்நாத் சிங்
கடல்சார் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஹைதராபாத் அருகே விகராபாதில் ரூ. 3,200 கோடியில் 2,900 ஏக்கரில் மிகக் குறைந்த அலைவரிசை (விஎல்எஃப்) கடற்படைத் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது:
இந்திய பெருங்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமைதியை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இந்த முயற்சிக்கு நமது அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அதிலிருந்து ஒரு நாடு விலகினாலும் தேசத்தின் பாதுகாப்புப் பணி கடினமாகிவிடும்.
கடல்சார் பாதுகாப்பு என்பது அண்டை நாடுகளுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சியாகும். அதில் அன்னியப் படைகளை அனுமதிப்பது நமது ஒற்றுமையைச் சீர்குலைக்கும். கடல்சார் பாதுகாப்பில் யாரையும் விலக்காமல் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என இந்தியா நம்புகிறது.
அதனால்தான் நாம் அண்டை நாடுகளுடன் அனைத்து சாதகமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் இந்த மிகக் குறைந்த அலைவரிசை (விஎல்எஃப்) கடற்படைத் தளம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்போது புரியும். விகராபாத் மாவட்டம், தாமகுடம் வனப் பகுதியில் அமைக்கப்படும் இந்த ரேடார் மையம் நாட்டின் இரண்டாவது மையாகும். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் கட்டபொம்மன் ரேடார் மையமே நாட்டின் முதல் மையமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஹைதராபாதில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தேசத்தின் பாதுகாப்பில் ரேடார் மையம் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் இம்மையம் தெலங்கானாவில் அமைவது பெருமைக்குரியது. விகராபாதில் ரேடார் மையம் அமைக்க தங்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் குற்றச்சாட்டியது பற்றி கேட்கிறீர்கள். அது தவறான தகவல்.
முந்தைய கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியில்தான் இந்த மையத்துக்கான நிலம் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை 2017, டிசம்பர் மாதம் இதற்கான அனுமதியை வழங்கியது.
அதைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு வனப் பகுதியில் 2,900 ஏக்கல் நிலம் இத்திட்டத்துக்காக மத்திய அரசு வசம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 2010 இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டது என்றார்.