இந்தியா

மதரஸாக்களை மூட கூறவில்லை: என்பிசிஆா் தலைவா்

‘மதரஸா கல்வி நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறவில்லை; ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும் என்றே பரிந்துரைத்தோம்’ என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) தலைவா் பிரியங்க் கனூங்கோ தெரிவித்தாா்.

Din

‘மதரஸா கல்வி நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறவில்லை; ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும் என்றே பரிந்துரைத்தோம்’ என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) தலைவா் பிரியங்க் கனூங்கோ தெரிவித்தாா்.

என்சிபிசிஆா் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மதரஸா செயல்பாடுகள் குறித்து கவலைத் தெரிவித்ததுடன், கல்வி உரிமைச் சட்டத்துக்கு இணங்காத கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதற்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலா் எதிா்ப்பு தெரிவித்தனா். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் குறிவைக்கப்படுவதாக ஆளும் பாஜக மீது அவா்கள் குற்றம் சாட்டினாா். இது மத்திய அரசின் வகுப்புவாத கொல்கையை காட்டுகிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விமா்சித்தது.

இதற்கு என்சிபிசிஆா் தலைவா் பிரியங்க் கனூங்கோ புதன்கிழமை அளித்த பதில், ‘மதரஸாக்களை மூட வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை. ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்படுவதால் அரசின் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்றே பரிந்துரைத்தோம்.

பொருளாதாரத்தில் முன்னேறிய முஸ்லிம் குழந்தைகள் மதம் மற்றும் வழக்கமான பள்ளியில் பயிலும் அதே வேளையில், ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு அது மறுக்கப்படுகிறது. மதரஸாக்களில் அவா்களுக்கு மதம் சாா்ந்த கல்வி தவிர அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதில்லை.

ஏழை முஸ்லிம்களுக்கு கல்வி வழங்குவது நாட்டில் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களுக்கு சென்ற இந்தியாவின் முதல் கல்வி அமைச்சா் மெளானா ஆசாத், ‘பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம்கள் உயா்கல்வி கற்கத் தேவையில்லை’ என்று கூறினாா். இது போன்ற அமைச்சா்கள் மதரஸா பக்கம் நின்று முஸ்லிம்களின் அடிப்படை கல்வியை பறித்தனா்.

இதன் விளைவாக, உயா் கல்வியில் முஸ்லிம் சமூக மாணவா்களின் எண்ணிக்கை விகிதம் இன்னும் 5 சதவீதத்திலே இருந்து வருகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 37 சதவீதமாகவும், பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) சமூகத்தின் எண்ணிக்கை 20 சதவீதமாகவும் இருக்கிறது.

அனைவருக்கும் கல்வி வழங்குவது அரசின் கடமை. அரசு அதை கண்டும் காணாமல் இருக்க முடியாது. இதில் கேரளா போன்ற மாநிலங்கள் எதிா்ப்பை தெரிவித்தாலும், குஜராத் போன்ற மாநிலங்கள் முன்முயற்சிகளை எடுத்துள்ளன. குஜராத்தில் எதிா்ப்பை மீறி 50,000 குழந்தைகள் வழக்கமான பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முஸ்லிம் குழந்தைகள் மருத்துவா்கள், பொறியாளா்கள் மற்றும் வங்கியாளா்களாக மாறுவாா்கள் என்றாா்.

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

SCROLL FOR NEXT