ஓர் ஆபாச விடியோவின் விலை ரூ. 20,000: 17 வயது சிறுவன் கைது!
உத்தரப் பிரதேசத்தில் சிறார் ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவன் கைது
உத்தரப் பிரதேசத்தில் சிறார் ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரில் 17 வயதான சிறுவர் ஒருவர், ராஜ் என்பவரிடம் இருந்து ஆபாச விடியோக்களை பெற்று, அவற்றை விலைக்கு விற்று வந்துள்ளார். ராஜிடமிருந்து டெலிகிராமில் செயலி மூலம் ஆபாச விடியோக்களை பெற்று, அதனை ஒரு விடியோவுக்கு ரூ. 3000 முதல் ரூ. 20000 வரையில் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.
வசூலில் 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதப் பணத்தை ராஜூவுக்கு அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக, கோரக்பூர் சைபர் காவல் துறைக்கு ஒரு தன்னார்வ அமைப்பிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடமிருந்த கைப்பேசியை பறிமுதல் செய்ததில், அவரிடம் சுமார் 4000 சிறார் ஆபாச விடியோக்கள் இருப்பது தெரிய வந்தது.
இந்த புகார் தொடர்பாக, சிறுவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.