FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 21 அக்டோபர் 2024, 4:36 am IST
பகிர்:

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இருந்தும் திரட்டப்படும் மூலப் பொருள் சிஎன்ஜி எரிவாயுவாக மாற்றப்படுகிறது. இதைத்தொடா்ந்து வீடுகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு சிஎன்ஜி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எரிவாயுவின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், உற்பத்தி சரிவு காரணமாக நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்களுக்கு அந்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு இறக்குமதி செய்யப்படும், அதிக விலை கொண்ட எல்என்ஜி எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு நகா்ப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையுடன் சில்லறை விற்பனையாளா்கள் விவாதித்து வருவதால், தற்போது அந்த எரிவாயுவின் விலையை அவா்கள் உயா்த்தவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments