முகப்பு
இந்தியா

கனமழை: பெங்களூருவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 அக்டோபர், 2024 at 11:13 AM
கோப்புப் படம்.
பகிர்:

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெங்களூருவுக்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் பெங்களூரு கிராமப்புற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான முதல் கனமழை/ இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

இந்த நிலையில் கனமழையைக் கருத்தில் கொண்டு, பெங்களூருவில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து பெங்களூரு நகர துணை ஆணையர் ஜெகதீஷ் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.