சோனியா 
இந்தியா

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

வயநாடு தொகுதியில் சோனியா பிரசாரம்

DIN

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தனது மகள் பிரியங்காவுக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல், தனது பதவியை ராஜிநாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் சார்பில், பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, வரும் 23ஆம் தேதி வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருக்கிறார். பிறகு, அவர், சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் இணைந்து, அன்றைய தினம் கல்பெட்டாவில் சாலையில் பேரணியாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேறகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள மாநிலத்துக்கு சோனியா காந்தி வருகை தரவிருக்கிறார். இங்கு அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பிறகு, சோனியாவின் உடல்நலம் ஒத்துழைக்காததால், அவர் பயணங்களை தவிர்த்து வந்தார்.

ஆனால், இந்த முறை, தேர்தலில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கும் பிரியங்காவுக்காக, சோனியா கேரளம் வந்து பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT