பஞ்சாபில் விவசாயிகளின் ஏஜென்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸில் குர்தீப் சிங் என்பவர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏஜென்டுபோல வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் சத்தியாலா கிராம தானியச் சந்தையில் புதன்கிழமை (அக். 23) பகல்வேளையில் வேலைக்காக சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று இளைஞர்கள் குர்தீப்பை துப்பாக்கியால் 4 முறை சுட்டுவிட்டு, தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக குர்தீப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; இருந்தபோதிலும், குர்தீப் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.
இதையும் படிக்க: இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.