உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், வெள்ளிக்கிழமை காலை தடம்புரண்டுள்ளது.
பயிர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.