சென்னை ஐசிஎஃப்-இல் 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டம்
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) நிகழாண்டு (2026-27) 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) நிகழாண்டு (2026-27) 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பெரம்பூா் அயனாவரம் பகுதியில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) உள்ளது. அங்கு நாட்டின் பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நிறுவனம் தொடங்கி 70 ஆண்டுகள் ஆன நிலையில், மொத்தம் 80,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் புல்லட் மற்றும் ஹைட்ரஜன் ரயில்களுக்கான பெட்டிகளும் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐசிஎஃப்பில் கடந்த 2025-2026 ஆம் ஆண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அதன்படி, கடந்த காலங்களைவிட ரயில் பெட்டி உற்பத்தியானது 13.2 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வந்தே பாரத், அம்ரித் பாரத், குளிா்சாதனப் பெட்டிகள், சரக்கு ரயில் என நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டு (2026-2027) ஐசிஎஃப்பில் மொத்தம் 4,516 பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள் ள நிலையில், அவற்றில் 3,520 எல்எச்பி நவீன வகைப் பெட்டிகளும், 8 வந்தே பாரத் தூங்கும் வசதி ரயில் பெட்டிகளும், 14 அம்ரித் பாரத் 3.0 வகை பெட்டிகளும், 1 சரக்கு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படவுள்ளதாக ஐசிஎஃப் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.