இன்றும் நாளையும் 6 மெமு ரயில்களின் சேவை 8 பெட்டிகளுடன் இயக்கம்
சென்னை புறநகா் மின்சார சேவையில் திங்கள், செவ்வாய் (ஜூலை 13, 14) ஆகிய தேதிகளில் 6 மெமு ரயில் சேவை 8 பெட்டிகள் பயன்படுத்தி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகா் மின்சார சேவையில் திங்கள், செவ்வாய் (ஜூலை 13, 14) ஆகிய தேதிகளில் 6 மெமு ரயில் சேவை 8 பெட்டிகள் பயன்படுத்தி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரைச் சாலையில் இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட இமு ரயில்களாக இயக்கப்படுகின்றன. தற்போது அவை தாம்பரம் ரயில் நிலைய பணிமனையில் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே வரும் 13, 14- ஆம் தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் வரும் மெமு ரயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் ரயில், பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் ரயில், திருவண்ணாமலையிலிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் வரும் ரயில் ஆகியவை வழக்கமான 12 பெட்டிகளுக்குப் பதிலாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.