தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார். ANI
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: பாஜக கூட்டணியில் தொடரும் இழுபறி!

மஹாயுதி கூட்டணியில் தொடரும் தொகுதி பங்கீடு பற்றி...

DIN

மகாராஷ்டிரத்தை ஆளும் மஹாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீட்டித்து வருகின்றது.

இந்த பிரச்னை மீண்டும் பாஜக தலைமையிடம் சென்ற நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜீத் பவாருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் இழுப்பறி

மகாராஷ்டிரத்தில் தற்போது முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக, துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

எதிர்க்கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் 30 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்ற சர்ச்சை நீடித்து வருகின்றது.

பாஜக 150 - 160 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில், ஷிண்டே அணி 70 -80 தொகுதிகளிலும், அஜீத் பவார் அணி 50 - 55 தொகுதிகளில் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால், வலுவான முதல்வராக மீண்டும் அமர்வதற்கு 100 தொகுதிகள் வரை ஷிண்டே எதிர்பார்கிறார்.

இதனிடையே, பாஜக 99 வேட்பாளர்கள், ஷிண்டே அணி 64 வேட்பாளர்கள், அஜீத் பவார் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. மூன்று கட்சிகளும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள 210 தொகுதிகளில் எவ்வித பிரச்னையும் இல்லை. மீதமுள்ள தொகுதிகளில் 30 தொகுதிகள் வரை மூன்று கட்சிகளும் கேட்பதால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மும்பைக்கு இருநாள் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, தொகுதி பங்கீடு பிரச்னையை மாநில அளவிலேயே பேசி முடித்துக் கொள்ளும்படி கூட்டணி தலைவர்களுக்கு அறிவுறுத்தி சென்றார்.

ஆனால், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வியாழக்கிழமை இரவு அமித் ஷாவை சந்திக்க அஜீத் பவாரும், ஃபட்னவீஸும் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT