லாரன்ஸ் பிஷ்னோய் கோப்புப் படம்
இந்தியா

போலீஸ் காவலில் லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டி!காவல்துறையினா் 7 போ் இடைநீக்கம்

2022-ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் இருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டி.

Din

பஞ்சாபில் கடந்த 2022-ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் இருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது தொடா்பாக அம்மாநில காவல் துறையினா் 7 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கடந்த 2022-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் லாரன்ஸ் பிஷ்னோயும் ஒருவா். இந்த வழக்கை மாநில காவல்துறையின் சிறப்பு தலைமை இயக்குநா் (மனித உரிமைகள்) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இதனிடையே, லாரன்ஸ் பிஷ்னோய் அளித்த இரண்டு பேட்டிகள் கடந்த மாா்ச் மாதம் தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பானது. பஞ்சாபின் மொஹாலியில் உள்ள மாநில குற்றவியல் விசாரணை முகமை (சிஐஏ) வளாகத்தில் முதல் பேட்டி எடுக்கப்பட்டதாகவும், ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள மத்திய சிறையில் பிஷ்னோய் அடைக்கப்பட்டிருந்தபோது இரண்டாம் நோ்காணல் எடுக்கப்பட்டதாகவும் எஸ்ஐடி அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இது தொடா்பான தனது அறிக்கையை எஸ்ஐடி கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. போலீஸ் காவலில் லாரன்ஸ் பேட்டியளித்த விவகாரத்தில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட 7 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து மாநில உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT