இன்று காலை புகைமூட்டமாகக் காணப்பட்ட இந்தியா கேட் சாலை. PTI
இந்தியா

தில்லியில் மிகக் கடுமையாக பாதிப்படைந்த காற்றின் தரம்!

தில்லியில் காற்று மாசு 'மிக மோசமான' நிலையில் இருப்பதாகவும், சில இடங்களில் ‘கடுமையான பாதிப்பு’ நிலைக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

தில்லியில் கடந்த இரு நாள்களில் காற்று மாசு மீண்டும் 'மிக மோசமான' நிலைக்குச் சென்றுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தில்லியில் இன்று காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (அக். 26) 255 ஆக இருந்த தரக் குறியீடு இன்று மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாள்களில் காற்று வீசும் வேகம் குறைந்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

காற்றின் தரம் குறித்து கண்காணிக்கும் நிலையங்களில் 40-ல் 36 நிலையங்களிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் ஆனந்த் விஹார், அலிபூர், பவானா, ஜஹாங்கீர்புரி, முந்த்கா, வாஸிர்பூர், விவேக் விஹார் மற்றும் சோனியா விஹார் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பாதிப்பு இருப்பதாகவும், 28 இடங்களில் மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி இன்று தில்லியில் காற்றின் வேகம் 0 கி.மீ அளவிலேயே இருக்கிறது.

காற்றின் வேகம் கடந்த இரு நாள்களில் சரியான அளவில் இருந்ததால் ’மிக மோசமான’ நிலையில் இருந்த காற்றின் தரம் ’மோசமான’ நிலைக்கு மேம்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், மீண்டும் இன்று காலை புகைமூட்டம் அதிகரித்துள்ளது.

நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.1 டிகிரியாகப் பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்திற்கான சராசரியை விட அதிகமாகும்.

மேலும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT