PTI
இந்தியா

காதி விற்பனை 400% உயர்வு! பிரதமர் பெருமிதம்

காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் காதி விற்பனை 400% அதிகரிப்பு!

DIN

புதுதில்லி: சுகாதார உள்கட்டமைப்புகள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை புதுதில்லியிலிருந்து காணொலி வாயிலாக இன்று(அக். 29) தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அயோத்தியில் பல ஆண்டுகளுக்குப் பின், தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு முதல்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில், காதி விற்பனை இப்போது 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது. காதி தொழில்துறை வளர்ச்சியடைவதையும், நெசவாளர்கள், வணிகர்கள், கலைஞர்கள் பயனடைவதையும் இது தெளிவாகக் காட்டுகிறது.

இந்த வளர்ச்சியானது, காதி தொழில்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் பயனளிக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்க இது வழிவகுக்கும், பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்”என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் கொள்கைகள் காதி மற்றும் கிராமோதயா நிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய கிராமப்புற மக்களின் வாழ்க்கையும் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் காதி கிராமோதயா 1.50 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பில் வணிகம் செய்கிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT